சென்னை :தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும்.
மேலும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.