சென்னை:கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பயின்ற தனியார் பள்ளி சூரையாடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகளை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியானதல்ல என்றும் அவர் கூறினார்.