கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில் காய்கறிக் கடைகளும், இறைச்சிக் கடைகளும் விசாலமான பள்ளி வளாகங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டுவருகின்றன. கரோனா இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவத் தொடங்கினால், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கல்வித் துறைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.