தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! - pudukottai school leave

School Leave: கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவம்பர் 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

schools-leave-in-tamilnadu-due-to-rain
schools-leave-in-tamilnadu-due-to-rain

By

Published : Nov 25, 2021, 7:47 AM IST

தமிழ்நாடு முழுவதும் அன்மை காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tamilnadu rain: இந்நிலையில்,தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

School Leave: அதன்படி, இன்று (நவம்பர்.25) புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஆபத்தான முறையில் கரையை கடக்கும் பள்ளி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details