தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை: கல்வி நிலையங்களுக்கு விடுமுறை - கன்னியாகுமரியில் வெள்ளம்

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school leave  heavy rain  rain flood  rain news  tamilnadu government  schools leave due to heavy rain  kanniyakumari flood  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை  பள்ளிகளுக்கு விடுமுறை  கனமழை  கன்னியாகுமரியில் கனமழை  கன்னியாகுமரியில் வெள்ளம்  வெள்ளம்
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

By

Published : Nov 15, 2021, 9:55 AM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாகக் கனமழை பெய்துவருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரண முகாம்களாகச் செயல்பட்டுவரும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மற்ற இடங்களில் வழக்கம்போல் பள்ளிகள் இன்று செயல்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிபேட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் இன்று (நவம்பர் 15) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பு: குமரியில் ஸ்டாலின் இன்று ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details