தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல்: டிச.10 எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு லீவு? - Tomorrow school leave

மாண்டஸ் புயல் (mondous cyclone) கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டம்?
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: எந்தெந்த மாவட்டம்?

By

Published : Dec 9, 2022, 10:52 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் (mondous cyclone) இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் அப்போது கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுவாலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேகமாக கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details