சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்துள்ளது.
மழையின் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய தாலுக்காவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக குன்றத்தூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொட்டித் தீர்த்த கனமழை..! பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்...