சென்னை: 12ஆம் வகுப்பில் 93.76 விழுக்காடு மாணவர்களும், 10ஆம் வகுப்பில் 90.07 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார். மேலும் உயர் கல்வியில் சேர்வதற்கு பள்ளி மாணவர்கள் ஹைடெக் லேப் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த 12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 'கரோனா காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்பு எவ்வாறு நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவோம். அதற்கும் இடையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துகள். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பின்னர் உயர் கல்வி செல்கின்ற அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டுவர்.
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் மாணவர்கள் பட்டியல் பள்ளியில் ஒட்டப்படும்.
உயர் கல்வியில் சேர்வதற்கு பள்ளி மாணவர்கள் ஹைடெக் லேப் எனப்படும் கணினி ஆய்வகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி இருக்கக்கூடாது. தேர்வில் தகுதிபெறாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட்டில் சிறப்புத் தேர்வு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் எனத்தெரிவித்தார்.
மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி: மேலும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1098,14417 என்கிற எண்ணில் ஆலோசனை பெறலாம் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12ஆம் வகுப்பில் 93.76 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 விழுக்காடு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 8,06,277 மாணவர்களில்7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளளனர். தேர்ச்சி விழுக்காடு 90.07 என உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காடு 95.2 என இருந்தது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வை 1லட்சத்து 7ஆயிரம் பேர் எழுதவில்லை.
உயர்கல்வியில் சேர்வதற்கு பள்ளி மாணவர்கள் ஹைடெக் லேப் மூலம் விண்ணப்பிக்கலாம் - அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படும். மேலும் துணைத்தேர்வினை எழுத விரும்பும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படும். அதற்கான பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியீடு