சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி குழும சார்பில் மாணவர்கள் ஆயிரம் பேர் பங்கேற்ற ஓட்டுப்போடுங்கள், கேள்வி கேளுங்கள் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியினை ஏவர்வின் பள்ளிக் குழும நிர்வாகத்தினர் இன்று கொளத்தூரில் உள்ள அப்பள்ளியின் வளாகத்தில் நடத்திக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சி.இ.ஓ மகேஸ்வரி பள்ளி மூத்த முதல்வர் புரூசோத்தம்மன் மற்றும் எவர்வின், பள்ளியின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
ஓட்டுப்போடுங்கள், கேள்வி கேளுங்கள்: பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு! - voting awareness
சென்னை: கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தி ஓட்டுப்போடுங்கள், கேள்வி கேளுங்கள் என்ற மாணவ மாணவியர்களின் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி 15 மாணவ குழுக்கள் தங்கள் பள்ளி மைதானத்தில் பிரமிட் வடிவமைப்பில் அமைத்து இருந்தனர். மேலும் அவர்கள் ஓட்டுபோடும்படி கெஞ்சுகிறோம். ஓட்டுப்போடுங்கள், கேள்வி கேளுங்கள் என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து இருந்தனர். இது தவிர 60 அடி நீளம் 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பேனரில் இதே செய்தியினை வலியுறுத்தினர்.
மேலும், உயர் வகுப்பு மாணவிகள் தங்கள் முகத்தில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்களை வரைந்து இருந்தனர். மேலும் 1 முதல் 6 வகுப்பு வரை பயிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு தயவுசெய்து ஓட்டுப்போடுங்கள் என்ற வாசகம் அடங்கிய அழைப்பிதழை வழங்கினர்.