தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் புதிய நெறிமுறைகள் - பேசுவதற்குத் தடையா?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

guideline
வழிகாட்டு நெறிமுறைகள்

By

Published : Aug 27, 2021, 2:16 PM IST

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் 50 விழுக்காடு மாணவர்களுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் கடைப்பிடித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • வகுப்புகள் வாரத்தில் ஆறு நாள்கள் நடத்த அனுமதி
  • ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்க வேண்டும்.
  • வகுப்பறையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இட வசதி இருந்தால் கூடுதல் மாணவர்களையும் அமரவைக்கலாம்.
  • மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால் சுழற்சிமுறையில் வகுப்புகளை வேறு நாள்களில் நடத்த வேண்டும்.
  • ஆன்லைன் வகுப்புகள், வேறு தொழில்நுட்ப முறையில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • மாணவர் நேரடியாகப் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்க விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
  • கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
  • பள்ளியை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டும்
  • பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் மேசை, நாற்காலி, கதவுகள், ஜன்னல் உள்ளிட்ட அனைத்தையும் அரசின் விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் கைகளை அடிக்கடி கழுவும் வகையில் சோப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் வைப்பதற்குத் தேவையான சானிடைசர்களை சுகாதாரத் துறையிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • கழிப்பறைகள், சுற்றுப்புறத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
  • பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேடு பயன்படுத்தக் கூடாது.
  • மாணவர்கள் கூட்டமாக இருக்க அனுமதிக்கக் கூடாது.
  • பள்ளியில் காலை வழிபாடு, விளையாட்டுகள், கலாசாரப் போட்டிகள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
  • வகுப்பறையில் கதவுகள், ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும்.
  • கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்
  • மாணவர்கள் குழுவாக அமர்ந்து சாப்பிடுவதற்கும், இடைவெளையின்போது பேசுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details