தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. விடுமுரை முடிந்து ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இந்தத் தேர்தலின் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பதிவான வாக்குகள் நேற்று முதல்எண்ணப்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.