தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு! - பாடப்புத்தகங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.

school-reopen

By

Published : Jun 2, 2019, 1:47 PM IST

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் இது குறித்து கூறும்போது, 'பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-20ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி ஜூன் 3ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்படுகிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக இரண்டு கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 750 பாடப்புத்தகங்கள், நோட்டுகள் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடப்புத்தகமும், ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளில் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 300 பாடப்புத்தகங்கள் அச்சிட்டு தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தால் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை மாணவர்களுக்கு வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

மேலும், நாளை பள்ளிக்கு அரசு பேருந்தில் பயணிக்கும் மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸை காட்டி இலவசாமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details