சென்னை:பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதில் பெற்றோர்கள் பங்கேற்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு, பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.