தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளுக்கு விடுமுறை - 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

school-leave-local-body-election
school-leave-local-body-election

By

Published : Oct 5, 2021, 12:44 PM IST

Updated : Oct 5, 2021, 1:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும் (அக். 6), வருகிற 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பரப்புரை அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தலுக்குத் தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் அக்டோபர் 6ஆம் தேதிவரை திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ’மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புப் பதிவு’ - வீர ராகவ ராவ்

Last Updated : Oct 5, 2021, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details