இது குறித்து பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோவிட்- 19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்பிற்கு காலாண்டு விடுமுறை -அமைச்சர் அறிவிப்பு...!
18:45 September 09
சென்னை: தற்போதைய சூழ்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 25 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது எனவும், இவற்றை காலாண்டு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழிக்கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நடத்தப்பெறும் இணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- இணையவழி வகுப்புகளில் வருகை, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது.
- மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும், இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்,
- மிண்ணனு முறைகள், மிண்ணனு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள், மதிப்பீடுகள் ஏதும் மாணவர்களின் இறுதித்தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக் கணக்கிடப்படக்கூடாது.
ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில், 21 முதல் 25 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது. எனவே, வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது - மதுரைக் கிளை