சென்னை:கரோனா தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடாமல், பாடத்திற்கு எதிரே தேர்ச்சி என மட்டும் பதிவு செய்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தற்பொழுது கட்டாயம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேசிய தேர்வுமுகமைக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.