கல்வி உதவி மையத்தை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சென்னை:பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கவும், ஆசிரியர்களின் நினைவு நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்திற்கு வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் ஒருங்கிணைந்த பள்ளி மாநிலத் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வினை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 14417 மாணவர்கள் கல்வி உதவி மையத்தை பார்வையிட்டார். அப்பொழுது இந்த மையத்திற்கு எவ்வளவு புகார்கள் வருகின்றன, அதன் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும்? அளிக்கப்படும் புகார்கள் முழுமையாக தீர்வு காணப்படுகிறது என்பது குறித்து பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.
மேலும், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் முறையினை மாற்றி புகார் தெரிவிக்கும் மாணவர்களுக்கு புகார் எண் மற்றும் அவரின் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான விபரத்தை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் அடைவுத் திறன் மையத்தை ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு இணையதளம் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும், மாதம் தோறும் மாணவர்கள் ஹைடெக் ஆய்வகத்தில் தேர்வினை எழுதுகின்றனர் என கூறினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு நடத்துவதால் கற்றல் மேம்பட்டு உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அடைவுத் திறன் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு கல்வி தரம் உயர்த்துவதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளீர்கள் எனவும், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: 2015ஆம் ஆண்டை விட தற்போதைய மழை பாதிப்பு குறைவு - மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி தகவல்!