இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களாகச் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் வரும் 27ஆம் தேதி முதல் திருத்தப்படவுள்ளன. ஊரடங்கு காரணமாக நீண்ட நாள்களாக வகுப்பறைகள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன.
விடைத்தாள் திருத்தும் மையங்களைச் சுத்தம் செய்ய உத்தரவு! - ஊரடங்கு உத்தரவு
சென்னை: 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வேலையாட்களைக் கொண்டு அறைகளை நன்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்கள் உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்கள், அறைகள் ஆகியவற்றை காலை, மாலை என இரு வேளைகளும் லைசால் போன்ற கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'வெவ்வேறு மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை' - அமைச்சர் செங்கோட்டையன்!