தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகம் - chennai school reopen

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 1) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர்.

school-college-reopening-today
school-college-reopening-today

By

Published : Feb 1, 2022, 10:46 AM IST

Updated : Feb 1, 2022, 10:59 AM IST

சென்னை:ஒமைக்ரான், கரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்றுமுதல் பள்ளி கல்லூரிகள் செயல்படலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் இன்று திறந்து செயல்படத் தொடங்கியுள்ளன. மாணவர்களும் நேரடி வகுப்பிற்கு மகிழ்ச்சியுடன் வருகைபுரிந்துள்ளனர். கல்லூரியில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் தொடங்கி நடைபெறவுள்ளது.

மாணவர்கள் உற்சாகம்

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். இது குறித்து மாணவிகள் கூறும்போது, ”பள்ளி வளாகத்தில் முழுமையான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து பின்பற்றவோம்.

மாணவர்கள் உற்சாகம்

பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நடத்துவது பயனுள்ளதாக அமையும். பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். நேரடி வகுப்புகளுக்கு வருவதால் தங்களின் சக மாணவர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ”எனத் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியை மாலதி கூறுகையில், ”அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்குத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் நேரடி வகுப்பில் மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடம் கற்பிப்போம்.

திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் தயார்செய்யப்பட்டு உள்ளனர். முழு ஆண்டிற்குள் அனைத்துப் பாடங்களும் நடத்தி மாணவர்கள் சிறப்பாகத் தேர்வு எழுதத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Last Updated : Feb 1, 2022, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details