தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம் - தேடும் பணி தீவிரம் - chennai beach

சென்னை: காசிமேட்டில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் அலையில் சிக்கி மாயமான சம்பவம் உறவினர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடல்
கடல்

By

Published : Oct 14, 2020, 10:17 PM IST

சென்னை மாவட்டம் ராயபுரம் பிச்சாண்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் கிரண், முகமது உசேன் என்ற சிறுவர்கள். இவர்கள் இன்று (அக்.14) மதியம் நண்பர்களுடன் இணைந்து காசிமேடு அண்ணா நகர் குடிசை பகுதி பின்புறத்தில் உள்ள கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கிரண், முகமது ஆகிய இரண்டு சிறுவர்கள் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து சிறுவன் கிரணை காப்பாற்றி அவருக்கு முதலுதவி அளித்து, ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிறுவன் முகமது உசேனை எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீன்பிடித் துறைமுக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்து, காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வழக்குரைஞர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு - எட்டு பேரை 4 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details