சென்னை:ராயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 17 வயது சிறுவன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினமும் வீட்டிற்கு செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்தகார்த்திக் (20) என்ற இளைஞர் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். மேலும், சிறுவனை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவன், கடந்த வாரம் பல்லாவரம் சந்தையில் ஒரு கத்தியை வாங்கி, அதனை மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு (மார்ச் 15) லாயிட்ஸ் காலனி பி.எம் தர்கா மெயின் தெருவில் கார்த்தி இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். இதனைக் கண்ட பள்ளி மாணவர், கார்த்திக் பின்னால் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை குத்திவிட்டு தப்பிச் சென்றார்.