சென்னை: தமிழ்நாட்டில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாகவும், மீட்புப் பணி காரணமாகவும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் இன்று (டிச.6) வரை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
தொடரும் மீட்புப்பணி; சென்னையில் நாளையும் (டிச.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - மிக்ஜாம் புயல் பாதிப்பு
School Colleges Leave in Chennai: மிக்ஜாம் புயலுக்குப் பின் சென்னையில் சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளையும் (டிச.7) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னையில் டிச.7 விடுமுறை
Published : Dec 6, 2023, 1:24 PM IST
இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதித்த சில பகுதிகளில் தற்போது வரை நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் மாணவர்கள் நலன் கருதி, நாளையும் (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.