தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

School Leave: நவ.20ஆம் தேதி எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? - விடுமுறை

கனமழை காரணமாக நவம்பர் 20ஆம் தேதி 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை
விடுமுறை

By

Published : Nov 19, 2021, 10:57 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒருவார காலமாகக் கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்குக் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

விடுமுறை

அந்த வகையில் நாளை(நவம்பர்.20) கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஆஸ்கார் விருது பெறுவதற்கான முழுத் தகுதியும் ஜெய் பீம் படத்திற்கு உள்ளது' - முத்தரசன்

ABOUT THE AUTHOR

...view details