கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன நிலையில், தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பணியாளர் புறநகர் ரயில் சேவைகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அட்டவணை நாளை (மே.25) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாள்களில் 151 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூர்மார்க்கெட் முதல் ஆவடி/ திருவள்ளூர்/ அரக்கோணம்/ திருத்தணி ஆகிய வழித்தடங்களில் 32 சேவைகள்
- திருத்தணி/ அரக்கோணம்/ திருவள்ளூர்/ ஆவடி ஆகிய வழித்தடங்களில் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்திற்கு 33 சேவைகள்
- மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை பகுதிகளுக்கு 15 சேவைகள்
- சூலூர்பேட்டை / கும்மிடிபூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்தில் 15 ரயில் சேவைகள்
- சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு 6 ரயில் சேவைகள்
- வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6 ரயில் சேவைகள்
- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்/ செங்கல்பட்டு/ திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு 22 ரயில் சேவைகள்
- திருமால்பூர்/ செங்கல்பட்டு/ தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை 22 சேவைகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.