சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது .
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் - schedule caste welfare meeting
தமிழகத்தில் கரோனா காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம் . ராஜலெட்சுமி, குழு உறுப்பினர்களான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் . கிருஷ்ணன் , இ.ஆ.ப. , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியில் நலத்துறை செயலாளர் ( முழு கூடுதல் பொறுப்பு ) எஸ் . மதுமதி,ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் திரு . சி . முனியநாதன் , இ.ஆ.ப. , சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப. , பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் டி. ரிட்டோ சிரியாக் , இ.வ.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்