டெல்லி :அதிமுக பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டு ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைக்கு தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்த வழக்கில் உச்ச நிதிமன்றம் இதனை தெரிவித்து உள்ளது.
"அதிமுக பொதுக் குழு தீர்மானங்களில் தலையிட முடியாது" - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்! - Admk Case supreme court verdict
அதிமுக பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
Etv Bharat
Published : Jan 19, 2024, 11:34 AM IST
இடைக்கால தடை விதித்தால் மேல்முறையீட்டு வழக்கை ஏற்றதாகி விடும் என்றும் நீதிமன்றம் இதில் தலையிட்டால் உட்கட்சி பிரச்சினை மேலும் அதிகரித்து விடும் என்பதால் தற்போதைக்கு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் நீதிபதி கண்ணா கருத்து தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :அயோத்தியில் இடம் பிடிக்கும் மாமல்லபுரம்! அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்கும் மாமல்லபுரத்தின் மரக்கதவுகள்!