தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

SBI: ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ண இன்றே கடைசி நாள்! - employment news in tamil

எஸ்பிஐ வங்கியின் கலெக்‌ஷன் ஃபெசிலிடேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

SBI Jobs 2023: ரூ.40,000 சம்பளத்துடன் கூடிய பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
SBI Jobs 2023: ரூ.40,000 சம்பளத்துடன் கூடிய பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

By

Published : Jan 10, 2023, 1:57 PM IST

சென்னை:ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Collection Facilitators பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,438 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்திருந்தது. இதன்படி தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி - ஓய்வு பெற்ற அலுவலர்கள் அல்லது எஸ்பிஐ வங்கியின் ஊழியராக இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கல்வித்தகுதி எதுவும் இல்லை.

ஊதியம் - பதவிகளைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.25,000, ரூ.30,000 மற்றும் ரூ.40,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் - 1 முதல் 3 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை - எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான bank.sbi/careers அல்லது sbi.co.in/careers என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து ENGAGEMENT OF RETIRED BANK OFFICERS/STAFF OF SBI & e-ABs ON CONTRACT BASIS என்பதை கிளிக் செய்து பணி குறித்த முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (ஜன.10) கடைசி நாளாகும்.

இதையும் படிங்க:தெற்கு சூடானில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் - ஊடகவியலாளர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details