அரியலூர் மாவட்டம் செந்துறையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கிக்கு வெளியே, பணம் எடுப்பதற்கும், பணம் செலுத்துவதற்கும் என இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வந்தது.
ஆறு மாதங்களாக செயல்படாமல் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்! - பாரத ஸ்டேட் வங்கி
அரியலூர்: செந்துறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு வெளியே இருக்கும் பணம் செலுத்தும் ஏடிஎம் ஆறு மாதங்களாக செயல்படாததால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆறு மாதங்களாக செயல்படாமல் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்!
இந்நிலையில், இதில் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரம் கடந்த 6 மாதங்களாக செயல்படமால் இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வங்கியில் நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தக் கூடிய சூழ்நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆறு மாதங்களாக செயல்படாமல் இருக்கும் பணம் செலுத்தும் ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்யுமாறு வாடிக்கையாளர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.