ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம், சித்ரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்தாண்டு ஜூன் மாதம்முதல் இந்தாண்டு ஜூன்வரை போதைப்பொருள் பயன்படுத்தியது, கடத்தியது என 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடையதாக வெளிநாட்டினர் மூவர் உள்பட 43 பேரை கைதுசெய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பல்வேறு இடங்களில் பயன்படுத்திய, கடத்தியதாக 2000 கிலோவுக்கு மேல் கஞ்சாவை மட்டும் போதைப்பொருள் அலுவலர்கள் பறிமுதல்செய்து 14 குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளதாகவும் கூறினர்.