தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின்

குற்ற நடவடிக்கைகளை புலனாய்வு செய்ய RAW, IB, Interpol போன்ற புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தி வந்த வாட்ஸ் அப் Call Log-ஐ எடுக்கும் முறையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் திமுக அரசுக்கு விரோதமாக பேசுபவர்களை வேவுபார்க்க பயன்படுத்தி வருவதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்கின்றனர்..! காவல்துறை உயர் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்கின்றனர்..! காவல்துறை உயர் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

By

Published : Nov 29, 2022, 2:20 PM IST

Updated : Nov 29, 2022, 5:37 PM IST

சென்னை: மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் அவ்வழக்குகளில் ஜாமின் பெற்ற நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் இரண்டாவது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனக்கு தெரிந்த, தன்னுடன் பேசி வரும் பல்வேறு காவல்துறையினரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் வேலையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்ததாக தெரிவித்தார்.

வாட்ஸ் அப் அழைப்புகளை டிராக் செய்யும் தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாத நிலையில், வாட்ஸ்-அப்பில் உள்ள Call Log-ஐ எடுக்கும் தொழில்நுட்பத்தை மாநில உளவுத்துறையும், சென்னை காவல்துறையும் கண்டுபிடித்து அதன் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

குறிப்பாக தன்னுடன் பேசி வரும் கீழ்மட்ட காவல்துறையினர் முதல் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை மாநில உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்களால் நேரில் அழைத்து மிரட்டப்படுவதே அதற்கு சாட்சி என்ற அவர், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலும் இந்த சட்டவிரோத வேலைகளை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஏற்கனவே கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கர் ஜிவால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு மண்டல இயக்குனராக இருந்தபோது அவரது மனைவி மம்தா ஷர்மா மற்றும் நாராயண யாதவ் ஆகியோர் இயக்குனர்களாக இருந்த D3D டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் வேலையை செய்துவந்ததாகவும், தொடர்ந்து உளவுத்துறையில் அவர் பணியாற்றியபோதும் அந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வந்ததாகவும் கூறிய சவுக்கு சங்கர், அவ்விவகாரம் சர்ச்சையானதால் மம்தா ஷர்மா பதவி விலகியதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் குற்ற நடவடிக்கைகளை புலனாய்வு செய்ய RAW, IB, Interpol போன்ற புலனாய்வு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தி வந்த சேவையான வாட்ஸ் அப் Call Log-ஐ எடுக்கும் முறையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் தற்போது திமுக அரசுக்கு விரோதமாக பேசுபவர்களை வேவுபார்க்க பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து உரிய ஆதாரங்களை திரட்டி விரைவில் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடலூர் மத்திய சிறையில் எத்தனை கைதிகள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை கைதிகள் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாரின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் போன்ற விவரங்களை சேகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

அந்த தகவல்களை உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை டி.ஜி.பி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமும், பதிவுத்தபால் மூலமும் புகாராக அளித்துள்ளதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் ஒன்றிரண்டு நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சிறைவாசம் தனக்கு மன உறுதியை தந்துள்ளதாகவும், முன்பைவிட பல மடங்கு உறுதியுடன் வெளியே வந்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை தனது செயல்பாடுகள் உணர்த்தும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:"தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல்" ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!

Last Updated : Nov 29, 2022, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details