சென்னை:சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி மற்றும் ஐய்யனார் கோயில்களை பார்வையிட்ட போது, கோயில் நிலங்கள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோயில் சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க மாவட்ட அளவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.