சென்னை: லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் ஸ்குவாஷ் சாம்பியன்ஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சவுரவ் கோசில், தீபிகா தினேஷ் கார்த்திக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
பதக்கங்களை வென்ற சவுரவ் கோசில், தீபிகா கார்த்திக் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற சவுரவ் கோசில், தீபகாவுக்கு உற்சாக வரவேற்பு பின்னர் தீபிகா தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வேன் என்றார். தீபிகா இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது