நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 13 வாக்குச்சாவடி வாக்குப்பதிவு, வரும் மே.19ஆம் தேதி நடக்கிறது. இதற்காக முன்னேற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காணொளி காட்சி மூலம் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை - election commision
சென்னை: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நெருங்குவதால் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு ஆலோசனை இன்று நடத்தினார்.
சத்ய பிரதா சாஹூ
இதையொட்டி வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.