தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் - ஸ்டாலின் - chennai latest news

சென்னை: கிராம சபையை அரசு தான் நடத்த வேண்டும், ஆனால் அதை அரசாங்கம் கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

satline
satline

By

Published : Feb 3, 2021, 6:42 PM IST

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், கிராம சபையை அரசு தான் நடத்த வேண்டும் ஆனால் அதை அரசாங்கம் கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் எனத் தெரிவித்தார்.

திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின்

மேலும் அவர் கூறுகையில்” நேற்று திருவெற்றியூரில் பேசிய ஒ.பன்னீர்செல்வம் அரசாங்கம் தான் கிராமசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சென்னார். அதனை மறுக்கவில்லை. அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம். இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை உள்ளது.

விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என்கிறார்கள். ஆனால் நாம ஆட்சிக்கே வந்தாச்சு. நாம் சொல்வதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளை செய்து கொண்டுடிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகளை செய்வோம் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்” என்றார்.

அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம்

இதையும் படிங்க: வன்முறை தூண்டியதாக தேச துரோக வழக்கு: உச்ச நீதிமன்றம் சென்ற சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய்!

ABOUT THE AUTHOR

...view details