தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவினருக்கு மக்கள் பிரச்னைகளைவிட கட்சி பிரச்னைகள் தான் முக்கியம்... கவுன்சிலர் குற்றச்சாட்டு - வடிகாலுக்காக அம்மா உணவகத்தை இடிக்க அனுமதி

திமுகவினருக்கு மக்கள் பிரச்னைகளை விட கட்சி பிரச்னையே முக்கியம் என அதிமுக மாமன்ற உறுப்பினர் சதிஷ்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

திமுக மக்கள் பிரச்சனைகளை விட கட்சி பிரச்சனைகள் தான் முக்கியம் ...சதிஷ்குமார் குற்றச்சாட்டு
திமுக மக்கள் பிரச்சனைகளை விட கட்சி பிரச்சனைகள் தான் முக்கியம் ...சதிஷ்குமார் குற்றச்சாட்டு

By

Published : Aug 30, 2022, 6:59 PM IST

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய 182ஆவது வார்டு உறுப்பினர் சதிஷ் குமார், ’இந்த மாமன்றக்கூட்டத்தில் உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்கவில்லை. திமுகவின் உட்கட்சி தேர்தலால் பலர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மக்கள் பிரச்னைகளை விட கட்சி பிரச்னையே முக்கியம் எனக்கருதுகிறார்கள்.

மாநகராட்சிக்குட்பட்ட 196ஆவது வார்டில் மழைநீர் வடிகாலுக்காக அம்மா உணவகத்தை இடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். மாதத்தில் 3-4 நாட்கள் தண்ணீர் வரவில்லை என மக்கள் புகார் அளிக்கின்றனர்.

இதுகுறித்து அடுத்த மாமன்றக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கமளிக்க வேண்டும். ஓபன் டெண்டர்களுக்கு பதில் கட்சி சார்ந்த நபர்களுக்கு சாதகமாக செயல்பட லிமிடெட் டெண்டர்களே கோரப்படுகிறது’ என்றார்.

இதையும் படிங்க:முன்னணி பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details