தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழை குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவை அரசு வழங்க வேண்டும் - திவ்யா சத்யராஜ் கடிதம் - திவ்யா சத்யராஜ்

ஏழை குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கிடைக்கும் ஊட்டச் சத்துகளை விலையில்லா திட்டத்தில் வழங்க ஆவணம் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

divya
divya

By

Published : Apr 9, 2020, 9:50 PM IST

நடிகரின் சத்தயராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் இயங்காததால் வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்களுக்கு ரத்தசோகை, இரும்பு சத்து குறைபாடுகள் ஏற்படும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சருக்கு திவ்யா எழுதிய கடிதம்

இதுகுறித்து திவ்யா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசுப் பள்ளி குழந்தைகளின் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்போது நகாராட்சி பள்ளிகளில் படிக்கும் 38% சிறுவர்கள், 40% சிறுமிகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு, ரத்த சோகை இருப்பது தெரியவந்தது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இதனால் இரும்புச்சத்து குறைப்பாடு, ரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.

தற்போது கோவிட்-19 அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் நகாராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காததால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அரசு இலவசமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இரும்புச் சத்து, ரத்த சோகையை நாம் ஈஸியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாள் பட்ட இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.

இதன் விளைவாக அக்குழந்தைகளுக்கு கரோனா தொற்று, பசியின்மை, வேறு எதும் பிற தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே ஏழை குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களை விலையில்லா திட்டத்தில் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details