சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
2019-05-20 16:27:31
சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களால் தலைமைச் செயலக அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டுவருகிறது.
இதனால் தலைமைச் செயலகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. மேலும், இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.