சென்னை:தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
நவம்பர் 16ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில்,மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் ஏற்பாடுகள், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
கடந்த வாரம், டிசம்பர் 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாக்காளர் பட்டியல் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர் இடமாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கவேண்டும். வருகிற 21, 22ஆம் தேதியும் டிசம்பர் மாதம் 12, 13ஆம் தேதியும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு - சத்ய பிரதா சாகு விளக்கம்!