தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவ.25-ல் வெளியாகும் சசிகுமாரின் 'காரி' படம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சசிகுமார் நடித்துள்ள படமான காரி நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சசிகுமாரின் ‘காரி’ படம்
சசிகுமாரின் ‘காரி’ படம்

By

Published : Nov 16, 2022, 2:21 PM IST

சென்னை: காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.

சசிகுமாரின் ‘காரி’ படம்

சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

சசிகுமாரின் ‘காரி’ படம்

சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சசிகுமாரின் ‘காரி’ படம்

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "டான் படம் பார்த்த போது சிரிப்பே வரவில்லை" - உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details