முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்துவருகிறார். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ் ஆலை, ஜெயா டிவி அலுவலகம் என 187 இடங்களில் வருமானவரித் துறையினரின் சோதனை நடைபெற்றது.
அந்தச் சோதனையில் பல்வேறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து நடைபெற்ற சசிகலா குடும்பத்தில் பல்வேறு தரப்பினரிடம் வருமானவரித் துறையின் விசாரணை நடைபெற்றது. அதில் ஏராளமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.