தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'லாக் டவுன் முடிந்தவுடன் வந்து விடுவேன்'- சசிகலா - chennai news

'ஊரடங்கு முடிந்தவுடன் தான் வந்து விடுவதாகவும், கட்சியை வழிநடத்தி கட்டுக்குள் கொண்டு வருவேன்' என்றும் சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளன.

sasikala-talks-with-admk-caders-audio-taps-released
'லாக் டவுன் முடிந்தவுடன் வந்து விடுவேன்'- சசிகலா

By

Published : Jun 19, 2021, 11:05 PM IST

சென்னை: கடந்த சில வாரங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசி வரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளி வந்துள்ளன. இந்த நிலையில் இன்று மூன்று தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோகள் வெளியாகி உள்ளன.

முதலில் எடப்பாடியில் இருக்கும் வேலுசாமியிடம் பேசிய சசிகலா, "நிச்சயம் கட்சியை வழிநடத்தி கட்டுக்குள் கொண்டு வருவேன். உழைத்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்" எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து மதுரையில் உள்ள குமரவேல் என்பவரிடம், "கட்டாயம் தான் கட்சிக்கு வந்து விடுவதாகவும், கவலை கொள்ள வேண்டாம் எனவும் பேசியுள்ளார்.

தொடர்ந்து, மதுரையை சேர்ந்த செந்தமிழ்செல்வி என்ற பெண்ணிடம், "லாக் டவுன் முடிந்தவுடன் நான் வந்து விடுவேன். நான் தைரியமாக இருக்கிறேன். ஏற்கெனவே அனைத்தையும் நான் பார்த்துவிட்டு தான் வந்தேன். கட்சியை அம்மா வழி நடத்தியது போல் நான் வழி நடத்துவேன். விரைவில் மதுரைக்கு வருவேன்" எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:சசிகலாவுக்கு எதிராக ஈரோடு அதிமுக சார்பில் கண்டன தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details