அதிமுக அவை தலைவர் மதுசூதனன் டிஜிபி திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது, அவருடன் அதிமுக அமைச்சர்களான ஜெயகுமார், சி.வி. சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,"அதிமுக கட்சி கொடியை இயக்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் தவிர மாற்று இடத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த கூடாது என புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பின்பு அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பதை அதிமுகவினர் கண்டித்துள்ளோம். சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. இனி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என டிஜிபியிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளோம்" என்றார்.