சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட்- பைக் மற்றும் நியூ ஜெனரேஷன் சைக்கிள் திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு மாசற்ற நகரத்தை அமைக்கும் பொருட்டு அடுத்த தலைமுறைக்கு இ-பைக்கின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நூறு ஸ்மார்ட்-பைக் நிலையங்களில் ஆயிரத்து 500 இ-பைக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. விரைவில் இது 500 நிலையங்களாக உயர்த்தப்பட்டு ஐந்தாயிரம் இ-பைக்குகளாக உயரும். இந்த திட்டம் லாப நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டும் இதுவரை லாபம் கிட்டவில்லை, தற்போதுதான் மக்களிடம் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துவருகிறது.