கடந்த சில நாள்களாகவே சசிகலா தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. இன்று வெளியாகியுள்ள புது ஆடியோவில் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த தொண்டர் ஒருவருடன் பேசியுள்ளார்.
அதில், " குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள். கட்சியில் இருப்பவர்களை வலிமையாக ஒன்றிணைத்து செல்வது மட்டுமே எனது எண்ணம், மேற்கு மண்டலம் எப்போதும் அதிமுகவிற்கு ஆதரவாக தான் செல்கின்றனர்.