சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் சசிகலா மற்றும் தினகரனைப் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இன்று (நவ.10) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர்.
சசிகலாவின் தவறான தகவல்கள்
அப்போது, "சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துவருகிறார்.