தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்' மருத்துவமனை நிர்வாகம்! - சசிகலா உடல் நிலை

பெங்களூரு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது - மருத்துவமனை நிர்வாகம்!
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது - மருத்துவமனை நிர்வாகம்!

By

Published : Jan 22, 2021, 11:12 AM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். இச்சூழலில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் போரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சையில் இருக்கும் சசிகலாவுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் ரேபிட், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன. 22) அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விக்டோரியா மருத்துவமனை தகவல்

அதில், கடும் நிமோனியா காய்ச்சல், நுரையீரலில் தீவிரத் தொற்று, உயர் ரத்த அழுத்தம், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை உள்ளதாகவும், அவரைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சசிகலாவுக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details