சென்னை: திமுக அரசு வெறும் விளம்ப அரசாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து இன்று (டிச.24) அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்? என்பதை தொண்டர்கள் சொல்ல வேண்டும்.
அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் நான் தான். பொங்கல் பரிசில் கரும்பு வழங்காதது விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். பொதுமக்களுடைய பிரச்சனை என்ன என்பதை கேட்பதை விட்டுவிட்டு எங்களுடைய உட்கட்சி பிரச்சனையை மட்டும் தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள்.