பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7:30 மணி அளவில் சென்னை புறப்பட்ட சசிகலா சுமார் 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு இன்று காலை 6:30 மணி அளவில்சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்திற்கு வந்தடைந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை அவர் நன்றாக இருக்கிறார். நான்கு ஆண்டுகளாக நான் சொல்லக்கூடிய ஸ்லீப்பர் செல், சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இருக்கலாம் விரைவில் வருவார்கள்.
பராமரிப்பு பணிக்காக அதிமுக அலுவலகத்தை மூடி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம், எங்களைப் பார்த்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம்.