தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஆதீனம் மறைவுக்கு சசிகலா இரங்கல் - மதுரை ஆதினத்தின் 292ஆவது குருமாக சந்நிதானம் அருணகிரிநாதர்

மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனகர்த்தர் அருணகிரிநாதரின் மறைவுக்கு சசிகலா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆதீனம் மறைவுக்கு சசிகலா இரங்கல்
ஆதீனம் மறைவுக்கு சசிகலா இரங்கல்

By

Published : Aug 14, 2021, 5:21 AM IST

சென்னை: மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ ஒன்றை சசிகலா வெளியிட்டுள்ளார்.

மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனகர்த்தர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(ஆக.13) காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ ஒன்றை சசிகலா வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் மிக தொன்மையான சைவமடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் 292ஆவது குருமாக சந்நிதானம் அருணகிரிநாதர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொன்னா துயரமடைந்தேன் .சந்நிதானம் அவர்கள் ஆன்மீகத்தோடு அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயலலிதா மீதும் என்மீதும் அவர் காட்டிய அன்பு என்றைக்கும் மறக்க முடியாது . சந்நிதானம் அவர்களை இழந்து வாடும் அனைத்து சைவ சமய அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மதுரை ஆதீனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details