சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்செய்ய இன்று (மார்ச் 3) கடைசிநாள் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்யக்கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதைப் பார்க்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடிகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல்போகும்.
அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், மக்களும், கட்சித் தொண்டர்களும் செயல்படுகின்றனர். அதிமுகவை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை.